உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டி.என்.சி., விஜய் மஹால் திறப்பு விழா

டி.என்.சி., விஜய் மஹால் திறப்பு விழா

தர்மபுரி, தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, ஜூடியோ ஷோரூம் பின்புறம், 2-வது தளத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில், முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் டி.என்.சி., விஜய் மஹால் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய, 650 பேர் மற்றும் 250 பேர் அமரக்கூடிய அரங்கங்கள், 300 பேர் அமரக்கூடிய டைனிங் ஹால், மாநகரங்களில் இருப்பது போன்று மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பல்வேறு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள டி.என்.சி., விஜய் மஹால் திறப்பு விழா கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜையுடன் நடந்தது. முன்னதாக, மேளதாளங்கள் முழங்க பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். டி.என்.சி., சிட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார். தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் டாக்டர் திவ்யா ராம்குமார், ஷரவந்தி தீபக், டி.என்.சி., சிட்ஸ் நிறுவன இயக்குனர்கள் மீனா இளங்கோவன், பிரேம், சினேகா பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் டி.என்.சி., விஜய் மஹால் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை