உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தக்காளி விலை உயர்வு

தக்காளி விலை உயர்வு

அரூர், தர்மபுரி மாவட்ட சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'அரூர், பாலக்கோட்டில் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 300 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றது. தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணம். தொடர்மழையால் செடியில், தக்காளி அழுகியதால் மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை