உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு பெற பயிற்சி வகுப்பு

சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு பெற பயிற்சி வகுப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தர்மபுரி, கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகங்களில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி முன்னிலை வகித்தனர். இதில், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் தபால் ஓட்டுகள் பெறுவது, பூத் சிலிப் வழங்குவது, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், தபால் ஓட்டு கள் பெறும் மண்டல அலுவலர் கனிமொழி, தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, தேர்தல் முதுநிலை ஆர்.ஐ.,கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி