மேலும் செய்திகள்
அரசு ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு முகாம்
15-Sep-2025
அரூர், அரூர் அடுத்த சித்தேரியில், 62 மலை கிராமங்கள் உள்ளன. சித்தேரி பஞ்.,ல், 7 அரசு உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி செல்ல வாகன வசதி இல்லாததால், இடை நின்ற பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளி செல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த, 6ல் சென்னை தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில், 26 வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஒரு வாகனம் சித்தேரியிலுள்ள அரசு உறைவிட துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று, சித்தேரி கிராம மக்கள் வாகனத்தை அலங்கரித்து சீர்வரிசையுடன் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் அசோக்குமார், தனி தாசில்தார் ஜெயசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Sep-2025