மேலும் செய்திகள்
'ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்'
20-Jun-2025
தர்மபுரி, பென்னாகரம் அருகே, வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மர்மமான முறையில் இறந்த, செந்தில் குடும்பத்தினரை, த.வெ.க., தலைவர் விஜய் சந்திக்க, தர்மபுரிக்கு வர முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே, ஏமனுார் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று தந்தத்திற்காக, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில், மார்ச், 1ல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு தர்மபுரி மாவட்டம், கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில், வனத்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், ஏப்., 4ல் வனத்தில் உடல் அழுகிய நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக, செந்தில் மனைவி சித்ரா மனுவின் படி, ஏப்., 9 அன்று செந்திலின் சடலம் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி விசாரணை நடக்கிறது.இதனிடையே, பென்னாகரம் வனத்தில், மர்மமாக இறந்த செந்தில் குறித்து, அவரது குடும்பத்தினரை, தர்மபுரி மாவட்ட, த.வெ.க., நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது, பனையூர் வந்து விஜயை சந்திக்க அழைத்தனர். அதற்கு செந்திலின் குடும்பத்தினர், தங்களால் வர முடியாத சூழலை வெளிப்படுத்தினர். அந்த தகவலை நிர்வாகிகள், விஜய்க்கு தெரியப்படுத்தினர். அதையடுத்து செந்திலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, அடுத்த வாரம், த.வெ.க., தலைவர் விஜய், வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, த.வெ.க.,வினர் செய்து வருகின்றனர்.சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் ஊழியர் அஜித் உயிரிழந்த விவகாரத்தில், அனைத்து கட்சியினரும் போலீசின் கொடூர செயல் மற்றும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். த.வெ.க., தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
20-Jun-2025