தொப்பூர் கணவாய் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில், லாரி அடுத்தடுத்து மூன்று பைக்-குகள் மீது மோதியதில், பெண் ஒருவர் பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ஐதராபாத்தில் இருந்து, ராஜபாளையத்திற்கு பஞ்சு பேல் லோடு ஏற்றிய லாரியை, திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 34, ஓட்டி வந்தார். லாரி, பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்த, கணவாய் பகுதியில் நேற்று மதியம், 12:15 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த இரு பைக், ஸ்கூட்டர் மீது, அடுத்தடுத்து மோதிவிட்டு, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்-ளானது.இதில், பைக்கில் பயணித்த அரூர் அடுத்த ஓபிலநாயக்கனஹள்-ளியை சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி செல்வமணி, 32, என்-பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் சென்ற இரு பெண்கள் உட்பட லாரி டிரைவர் என நான்கு பேர் படுகாயம-டைந்தனர். தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து குழு-வினர், படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். விபத்து நடந்த இடத்தில் தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் நேரில் ஆய்வு செய்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.