மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
17-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், அதகபாடி பஞ்., சின்ன தடங்கத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரிகள் மாது, 48, சஞ்சீவன், 36, மற்றும் ஆட்டுகாரம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 42. இவர்கள் கடந்த, 26 அன்று சின்ன தடங்கத்திலுள்ள விவசாய நிலத்தில் இருந்த மது பாட்டில் எடுத்து குடித்துள்ளனர். அப்போது, மூவருக்கும் வாந்தி, உடல் நடுக்கம் ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், டி.எஸ்.பி., சிவராமன் விசாரணை மேற்கொண்டனர்.கட்டட மேஸ்திரி மாதுவின் பக்கத்து நிலத்துக்காரர், சின்ன தடங்கத்தை சேர்ந்த உரக்கடை உரிமையாளர் சிங்காரவேல், 55. இவருக்கும் கட்டட மேஸ்திரி மாதுவுக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. அதனால், சிங்காரவேல், தன் நண்பரான மாரண்டஹள்ளியை சேர்ந்த மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றும் மாயக்கண்ணன், 45, என்பவரின் உதவியுடன், மாதுவை பழி வாங்கும் நோக்கத்தில், கடந்த, 26 அன்று மாதுவுக்கு கொடுக்க, மதுபாட்டில் மூடியை திறக்காமல், சிரிஞ்ச் மூலம் பூச்சி கொல்லி மருந்தை மதுவில் கலந்து, விவசாய நிலத்தில் வைத்துள்ளனர். இது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிங்காரவேல், மாயகண்ணன் ஆகியோரை தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
17-Jul-2025