யானையை சுட்டுக்கொன்று தந்தம் திருடிய 2 பேர் கைது
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனச்சரகம், ஏமனுார் வனக்காவல், சிங்காபுரம் அடுத்த கோடுபாய் கிணறு வனப்பகுதியில் கடந்த மார்ச் 1ல், ஆண் யானையை சுட்டுக்கொன்று மர்ம நபர்கள் அதன் தந்தங்களை கடத்தினர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், யானையை சுட்டு கொன்றதாக, தர்மபுரி மாவட்டம், ஏமனுார் அடுத்த கொங்காரப்பட்டியை சேர்ந்த செந்தில், சேலம் மாவட்டம், கோவிந்தப்பாடி புதுாரை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.