உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சென்டர் மீடியனில் கார் மோதியதில் இருவர் பலி

சென்டர் மீடியனில் கார் மோதியதில் இருவர் பலி

கரூர், கரூர் அருகே கருப்பம்பாளையம் அக்ரஹார தெருவை சேர்ந்த லோகநாதன் மகன்கள் நித்திஷ் கண்ணன், 23, தனுஷ், 21; கரூர் வாஞ்சியம்மன்கோவில் தெரு அன்பு மகன் திருநெடுங்கனநாதன், 21; கருப்பம்பாளையம் முத்துராஜா தெரு கணேசன் மகன் சிவராஜன், 24; நண்பர்களான நான்கு பேரும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரில் உள்ள, நித்திஸ் கண்ணன் உறவினர் வீட்டிற்கு போர்டு காரில் சென்று விட்டு, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர். சிவராஜன் காரை ஓட்டினார். சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையம் அருகே, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருப்பதற்காக, வலது புறமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் ஏறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். கரூரில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திருநெடுங்கனநாதன், சிவராஜன் இறந்தனர். விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை