உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உதயநிதி பிறந்த நாள் விழா

உதயநிதி பிறந்த நாள் விழா

உதயநிதி பிறந்த நாள் விழாஅரூர், நவ. 28- தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரூர் தி.மு.க., கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டியில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரேம்குமார், பார்த்தீபன், அருள், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பென்னாகரம் அரசு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் செய்திருந்தார். பென்னாகரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.* பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் முனிராஜ், வடிவேல், சத்யா, அபிராமி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மாரண்டஹள்ளி நான்குரோடு பகுதியில் உள்ள தி.மு.க., கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை