உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடையாளம் தெரியாத ஆண், பெண் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண், பெண் உடல் மீட்பு

அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், தடங்கம் அடுத்த புதிய சிப்காட் பகுதியில், அடையாளம் தெரியாத, 55 வயது ஆண் மற்றும் 50 வயது பெண் என, இரு சடலங்கள், காயங்களுடன் அழுகிய நிலையில் கிடப்பதாக, நேற்று காலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆண், பெண் சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளன. எந்த பகுதியை சேர்ந்தவர்கள்; வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வந்து வீசப்பட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர். சடலங்கள் வீசப்பட்ட புதிய சிப்காட் ரோடு, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இந்நிலையில், அவ்வழியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை