வி.சி., நிர்வாக குழு கூட்டம்
அரூர், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., நிர்வாக குழு கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் நடக்கும் ஆணவ கொலைகளுக்கு, தமிழக அரசு தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.