உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்

தர்மபுரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்

தர்மபுரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடிபாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்தர்மபுரி, நவ. 5-தீபாவளி சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி நகராட்சியின், 2 வது வார்டுக்கு உட்பட்ட கோட்டை பகுதியில், மகேந்திரன் என்பவர், தீபாவளி சீட்டு நடத்தினார். அதில், பரிசு பொருட்கள், இனிப்பு, பட்டாசு வழங்குவதாக பொதுமக்களிடம் மாதந்தோறும், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வசூலித்தார். அதன்படி, 200க்கும் மேற்பட்டோரிடம், 11 மாதமாக பணம் பெற்று வந்தவர், தீபாவளி பண்டிகைக்கு முன் தலைமறைவானார். சில நாட்களுக்கு பின் ஊர் திரும்பிய நிலையில் அவரிடம் பணம் செலுத்திய அனைவரும் சென்று, தீபாவளி சீட்டுக்கான பரிசு பொருட்கள், இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல், ஆபாசமாக பேசி அனுப்பினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை