உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இன்று வாக்காளர் பட்டியல் இறுதி சிறப்பு முகாம்

இன்று வாக்காளர் பட்டியல் இறுதி சிறப்பு முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் இறுதி சிறப்பு முகாமை, புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய பயன்படுத்தி கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும் நவ., 12 முதல் டிச., 11 வரை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக நவ., 21, 22 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடந்து முடிவடைந்த நிலையில் இன்று (நவ.29) இறுதி சிறப்பு முகாம் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 வரை நடக்கவுள்ளது.எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். 2008 டிச., 31க்கு முன் பிறந்த புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பமளித்து வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளவும். மேலும், 2008க்கு பின், 2009 டிச., 31ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், இச்சிறப்பு திருத்த பணிகள் டிச., 11ம் தேதி வரை நடக்கவுள்ளதால், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் உள்ள அலுவலர் அல்லது தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இது குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா எண், 1950 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !