மேலும் செய்திகள்
வனத்திலுள்ள குட்டைகள் தொடர் மழையால் நிரம்பின
21-May-2025
அரூர்: அரூரில் நெல் அறுவடை செய்த வயல்களில், தொடர் மழையால் தேங்கிய மழைநீரால், வைக்கோல் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம், கீரைப்பட்டி, தாமலேரிப்பட்டி, கீழ்மொரப்பூர், கே.வேட்ரப்பட்டி, மாம்பட்டி, வேப்பம்பட்டி, அச்சல்வாடி, வாச்-சாத்தி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்-டாரத்தில், சில வாரங்களுக்கு முன், இயந்திரம் மூலம், 2ம் போக நெல் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அறுவ-டைக்கு பின், வயல்களில் கிடக்கும் வைக்கோலை, விவசாயிகள் விற்பனை செய்வதற்காகவும், தங்களின் கால்நடைகளுக்கு தீவன-மாக பயன்படுத்துவது வழக்கம்.கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், வயல்களில் மழைநீர் தேங்கி, வைக்கோல் சேதமடைந்ததால், கால்நடைக-ளுக்கு பயன்படுத்த முடியாமலும், அதை விற்க முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'அறுவடைக்கு பின், கிடைக்கும் வைக்கோலை, கால்நடை வளர்ப்பவர்கள் வைக்கோல் கட்டு ஒன்று, 180 முதல், 220 ரூபாய் வரை கொடுத்து வாங்கி செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், வயல்களில் மழை நீர் தேங்கி, வைக்கோல், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.
21-May-2025