குடியரசு தினத்தில் ரூ.5.80 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 76வது குடியரசு தினவிழா- நேற்று நடந்தது. இதில், கலெக்டர் சாந்தி தேசியக்கொ-டியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 51 போலீசாருக்கு, 2025ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் மற்றும் பல்-வேறு துறைகளை சேர்ந்த, 136 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.மேலும் மொத்தம், 25 பயனாளிகளுக்கு, 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்-தன. இதில், மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ., காயத்ரி உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி, கல்லுாரி மாண-வியர் பலர் கலந்து கொண்டனர்.* அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்-பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல், அரூர் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், அரசு கல்லுாரி, அனைத்து அரசு பள்ளிகள், டவுன் பஞ்., அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்-புகள் மற்றும் மொரப்பூர், கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில் குடி-யரசு தின விழா விமர்சையாக நடந்தது.* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டல அலு-வலகத்தில், பொது மேலாளர் செல்வம் மண்டல அலுவலகத்தில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.இதில், துணை மேலாளர் ராஜராஜன் வரவேற்றார். பொதுமே-லாளர் சிறப்புரையாற்றி, மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலு-வலக பணியாளர்களை பாராட்டி, பரிசு வழங்கினார்.