உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேட்டையாடப்படும் வன விலங்குகள்; வேடிக்கை பார்க்கும் வனத்துறை

வேட்டையாடப்படும் வன விலங்குகள்; வேடிக்கை பார்க்கும் வனத்துறை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அரூர் என, 4 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் மான், முயல், காட்டு பன்றி, மயில், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. சமீப காலமாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், வன விலங்குகளை வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விலங்கின ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கீழ்மொரப்பூர், வாச்சாத்தி, கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழானுார், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி, கம்பி வலை மற்றும் நாய்கள் மூலம், வேட்டையாடப்பட்டு வருவதுடன், இதன் இறைச்சி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீது, வனத்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை தவறுவதால், வன குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிடிபடுவர்கள் மீது முடிந்த வரை கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் அபராதம் மட்டும் வசூலித்து விட்டு அனுப்பி விடுகின்றனர். அரூர் கோவிந்தசாமி நகர் பகுதியில், அடிக்கடி நாய்கள் கடித்து, மான்கள் உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. மேலும், மான்கள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளை, வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடித்து அவர்கள் மீது, வழக்கு தொடர்ந்து, அபராதம் உள்ளிட்டவை விதித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !