உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நகை திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது

ஓசூர்:ஓசூர் அருகே சென்னத்துாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா, 53. இவர் தன் வீட்டில், 18.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 22 பவுன் நகையை பெட்டியில் வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார். பெட்டியை நேற்று முன்தினம் திறந்து பார்த்த போது, நகை திருட்டு போனது தெரிந்தது. ஓசூர் டவுன் போலீசார் விசாரணையில், மஞ்சுளா வீட்டின் அருகே வசிக்கும் திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண்ணான பார்வதம்மாள், 52, என்பவர், மஞ்சுளாவுடன் நெருங்கி பழகி தோழியாக இருந்ததும், மஞ்சுளா வீட்டில் குளிக்கும் போது, சமையல் செய்யும் போது, அவரது வீட்டிற்கு வந்த பார்வதம்மாள், மஞ்சுளாவிற்கு தெரியாமல் சிறிது, சிறிதாக, 22 பவுன் நகையை திருடியதும் தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், 22 பவுன் நகையை மீட்டு, அவரை ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி