உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 40. மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இங்கு அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள், 35, என்பவர் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் தன் தாய் வீடான பாப்பாரப்பட்டி அடுத்த ஓ.ஜி.ஹள்ளிக்கு சென்றார். பின் அன்றிரவு முருகேசனுடன் பைக்கில் ஏ.பள்ளிப்பட்டிக்கு வந்தார். வழியில் தர்மபுரி - சிந்தல்பாடி ரோட்டில் ஒடசல்பட்டி அருகே, முருகேசன் பைக்கை நிறுத்தினார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் முனியம்மாள் கழுத்திலிருந்த, 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை