உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கனவு இல்லம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கனவு இல்லம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து பேசினார். இதில், அரூர் ஒன்றியத்தில், 34 பஞ்.,களில் வசிக்கும் அனைத்து கிராம ஏழை மக்களுக்கு கருணாநிதி கனவு இல்லம் வழங்கிட வேண்டும். அரூர் வட்டாரத்தில் இருளர் இனமக்களுக்கு வழங்-கப்பட்ட பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், தமிழ்நாடு அரசு வழங்கும் பங்கீட்டுத் தொகையை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் குமார், நிர்வா-கிகள் வேலாயுதம், ஜடையாண்டி, வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை