மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
03-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஓமலநத்தத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 27. இவர், நேற்று காலை, 9:30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த ருக்கு என்பவரது நிலத்திலுள்ள அவித்தி மரத்தில் இரும்பு கொக்கியால் ஆட்டுகுட்டிக்கு தழை உடைத்துள்ளார். அப்போது, மரக்கிளை உடைந்து அருகிலிருந்த மின்கம்பியில் பட்டு, மின்சாரம் தாக்கியதில், நவீன்குமார் கீழே விழுந்து மயக்கமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, நல்லம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Jul-2025