உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதி; இயற்கை உணவு பொருட்களை நாடும் மக்கள்

மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதி; இயற்கை உணவு பொருட்களை நாடும் மக்கள்

மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நகரில் பயணிக்கும் நபர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மார்க்கெட்டிங், உணவு, சிலிண்டர், தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முதியவர்கள் சொந்த வேலைக்காக வங்கி,போஸ்ட் ஆபீஸ் செல்ல சிரமம் அடைகின்றனர். பள்ளியில் தற்போது பிஸ்2 தேர்வு நடந்து வருவதால் மதிய வேளையில் பிற வகுப்புகள் துவங்குகின்றன. இதனால் வெயிலில் பள்ளி குழந்தைகள் பயணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவு பொருட்களை நாடும் நிலைக்கு மக்களும் வந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

baala
மார் 07, 2025 09:44

இயற்கை உணவு பொருள் எங்கே கிடைக்கிறது. அப்படி கிடைத்தாலும், அது வாங்கும் விலையில் / இல்லையே.


சமீபத்திய செய்தி