உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொசு ஒழிப்பு பணிகளில் 150 பணியாளர்கள்

கொசு ஒழிப்பு பணிகளில் 150 பணியாளர்கள்

திண்டுக்கல்: ''திண்டுக்கல் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்''என, திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் முத்துக்குமார் தெரிவித்தார்.

நகரில் அதிக இடங்களில் குப்பை குவிக்கப்படுகிறதே...

48 வார்டுகளிலும் துாய்மை பணியாளர்கள் காலை,மாலை 2 நேரமும் குப்பை சேகரிக்க செல்கின்றனர். மக்களும் மக்கும்,மக்காத குப்பை தரம்பிரித்து வழங்குகின்றனர். இதனால் நகரில் எங்கும் குப்பை தொட்டிகள் கூட இருப்பதில்லை. குப்பை கொட்டப்படும் இடங்களை தேர்வு செய்து அதை சுத்தப்படுத்தி கோலங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அவர்கள் வீடு வீடாக சென்று மழைநீர்,தேவையில்லாமல் தண்ணீர் தேங்கியிருப்பதை தடுக்கின்றனர். நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் தொட்டிகளில் கொசு தடுப்பு மருந்தை தெளிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சல் பரவுகிறதா...

நகரில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் இல்லை. நகர் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். நகரில் செயல்படும் 100 பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியிலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கண்காணிக்கவும் 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குழுக்களாக பிரிந்து எல்லா பள்ளிகளுக்கும் நேரில் சென்று முகாம்கள் நடத்தி மாணவர்களை தனித் தனியாக பரி சோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர்.

ம ருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறதா...

48 வார்டுகளிலும் அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தி பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறோம். காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்கிறோம்.

நுண்உர செயலாக்க மையங்களின் பயன்பாடுகள் என்ன...

நகரில் தினமும் 80 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றை துாய்மை பணியாளர்கள் செயல்பாட்டில் உள்ள 10 நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு வந்து மக்கும்,மக்காத குப்பை என தரம்பிரித்து இயந்திரங்களில் போடுகின்றனர். அதன்பின் அவைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகள்,மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

வீட்டுத்தோட்டம் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்துகிறீர்களா...

நகரில் சிலர் தங்கள் வீட்டில் மீதமாகும் கழிவுகளை உரமாக்கி மாடியில் இயற்கை முறையில் தோட்டம் அமைத்து காய்கறிகளை தயாரிக்கின்றனர். அவர்களை மாநகராட்சி நிர்வாகம் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !