உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தோட்டத்து வீட்டில் புகுந்த மலைப்பாம்பு

தோட்டத்து வீட்டில் புகுந்த மலைப்பாம்பு

நத்தம்: -நத்தம் சின்ன அரவங்குறிச்சி விவசாயி முத்துராமன் 37. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் இன்று காலை 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. நத்தம் தீயணைப்புப் துறையினருக்கு விவசாயி, தகவல் தெரிவித்தார். நத்தம் தீயணைப்புத்துறை நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் தோட்டத்து வீட்டில்மலைப்பாம்பை பொது மக்கள் உதவியுடன் பிடித்தனர். பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !