உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பழநி : பழநி சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் 43 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில் 1973 -1981 வரை படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். வெங்கடேஷ், நாகேந்திரன், ரவி, நல்லதம்பி, வெங்கடேஷன், ஹெலன்கையர் நிஷா பங்கேற்றனர். குடும்பத்துடன் வந்திருந்த அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களின் குழந்தைகள் கவிதைகள் பாடி நடனம் ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை