உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோபால்பட்டி : கோபால்பட்டி வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1974ல் 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 75 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அப்போது ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்புராமன், ஆசிரியர் அழகர்சாமி, பொன்னையா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது. அப்போது அனைவரும் தங்களின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி பருவ கால நிகழ்வுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். நினைவு பரிசு வழங்கப்பட்டது. குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியரும் முன்னாள் மாணவருமான தனராஜன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை