பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பழைய காளாஞ்சிபட்டி பிரம்ம ஸ்ரீ ஓசரி பட்டக்காரர் குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. கோயில் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவராட்டம் ஆடினர். மாவிளக்கு பழச்சிறப்பு, மஞ்சள்நீர் அழைப்பு நடந்தது. விழாவில் திண்டுக்கல், தேனி, கரூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.