உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் புதிய கலெக்டர் அலுவலகம்; சட்டசபை பொது கணக்கு குழு பரிந்துரை

திண்டுக்கல்லில் புதிய கலெக்டர் அலுவலகம்; சட்டசபை பொது கணக்கு குழு பரிந்துரை

திண்டுக்கல் : ''திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக,''சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை பேசினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: 31 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை புதிதாக கட்ட சட்டசபை பொது கணக்கு குழு பரிந்துரை செய்கிறது. கொடைக்கானல் மேம்பாட்டிற்காக மாஸ்டர் பிளான் , நெரிசலை சீரமைக்க மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானலில் கட்டப்பட்ட கட்டடங்களில் விதிமீறல் குறித்து தீர்வு காண வேண்டும். கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அவசியம் என்றார்.16 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். குழு உறுப்பினர்கள் எம்.எல். ஏ.,க்கள் அக்ரி எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், செந்தில் குமார்,சேகர், சார்பு செயலாளர் பால சீனிவாசன், எஸ்.பி., பிரதீப் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ