உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் தொடர் சாரல் மழை

கொடைக்கானலில் தொடர் சாரல் மழை

கொடைக்கானல் : கொடைக்கானலில் 2வது நாளாக நீடித்த சாரல் மழையால் குளுகுளு சீதோஷ்ண நிலை ஏற்பட்டதை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இரு மாதங்களாக சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து புழுக்கம் நிலவியது. சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மிதமான மழை பெய்ததை தொடர்ந்து சாரல் பெய்யத் தொடங்கியது. நகரை பனிமூட்டம் சூழ்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. பயணிகள் ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை