கார்த்திகை சிறப்பு பூஜை
பழநி:பழநி முருகன் கோயிலில் மாசிமாத கார்த்திகை முன்னிட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஆறு கால பூஜையில் நடந்தது. குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் பூம்பாறை குழந்தை வேலப்பர், தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை , சஷ்டி விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, விளக்கு பூஜை, பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.