மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
12-Feb-2025
சத்திரப்பட்டி:பழநி அருகே புளியம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி ஏமாற்ற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பழநி சுற்றுப் பகுதியில் பல இடங்களில் செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. நேற்று புளியம்பட்டி அருகே செங்கல் சூளைக்கு வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி ஒருவர் வந்தார். சந்தேகமடைந்த செங்கல் சூளை அலுவலர்கள் சத்திரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஏமாற்ற முயன்றவர் சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன் 75, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
12-Feb-2025