நம்ம பிரியாஸ் துணிக்கடை திறப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் சத்திரம் தெருவில் நம்ம பிரியாஸ் பட்டு, ஜவுளி, ரெடிமேட்ஸ் கடை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை ராம்கோ சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நிர்வாக இயக்குனர் மாரிமுத்து, இணை இயக்குனர்கள் நாகராஜன், பிரபு, பூமாலை ஆகியோர் வாடிக்கையாளர்களை வரவேற்றனர். பொதுமக்கள் வாங்கும் அனைத்து ஆடைகளுக்கும் திறப்பு விழா சலுகையாக 10 சதவீத தள்ளுபடியும், திருமண பட்டு சேலைகளுக்கு சிறப்பு சலுகையாக 20 சதவீத தள்ளுபடியும்,ஆடைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படும்.