உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்மனுக்கு நாளை திருக்கல்யாணம்

அம்மனுக்கு நாளை திருக்கல்யாணம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமரிசையாக நடக்கிறது. பிப்.21 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. பிப். 25ல் அதிகாலை 2:00 மணிக்கு கம்பம் நடுதல் நடந்தது. கம்பம் கோயில் முன் நடப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். மார்ச் 4ல் கொடியேற்றம் நடந்தது. பூவோடு திருக்கம்பத்தில் வைக்கப்பட்டது. பத்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மார்ச் 11ல் அம்மனுக்கு மாலையில் 4:30 மணிக்கு திருக்கல்யாணத்திற்கு பொட்டும் காரையும் கொண்டு வருதல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச் 12ல் மாலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கதுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி