மேலும் செய்திகள்
வெயிலை சமாளிக்க 'கொடை'யில் முகாம்
16-Feb-2025
கொடைக்கானல் : குளு, குளு நகரான கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா நகரான கொடைக்கானலில் சில்லிடும் சீதோஷ்ண நிலையை பயணிகள் விரும்புவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் துவக்கத்திலே அதிகரித்துள்ளது. சில தினங்களாக வழக்கத்திற்கு மாறாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. சில்லிடும் நகரில் நீடிக்கும் வெயிலால் புழுக்கம் அதிகரித்து மின்விசிறியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.முக்கிய அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் வெயிலை சமாளிக்க மலை நகருக்கு வந்த பயணிகள் வெயிலால் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்த பயணிகள் நிழலை நாடும் நிலை ஏற்பட்டது. நேற்று பகலில் 26 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.
16-Feb-2025