உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல், ஜூலை 10- ஆத்துார் தாலுகா கொட்டாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் 46. இவரது மனைவி நந்தினி 33. இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் ரெட்டியார்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஜெயபால் திண்டுக்கல் சிறையிலும், நந்தினி மதுரை மத்திய  சிறையிலும் அடைக்கப்பட்டனர். அதேபோல் மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கிடாரிபட்டியை சேர்ந்த சையது காட்டு பாவா 36, பொது ஒழுங்கு பாதிக்குமாறு  செயல்பட்டதாக ரெட்டியார்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் மூவரையும் குண்டர்  சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் துர்கா அனுமதி அளித்ததன்பேரில் மூவரும் குண்டாசில் சிறை வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை