மேலும் செய்திகள்
'பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்'
08-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தற்காலிக ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால், ஒருசில நாட்களில் ரோடுகளில் பெருமளவு குப்பைகள் தேங்கியது. தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்பிருந்தே சிறுவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டதால் ரோடுகளில் பட்டாசு குப்பைகளும் சேர்ந்தது. எனவே, ரோடுகளில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதல் ஈடுபட்டனர். காலை 10:00 மணி வரை துாய்மை பணி நடந்தது. 350 துாய்மை பணியாளர்கள் மூலம் நேற்று ஒருநாளில் மட்டும் 150 டன் குப்பைகள் அகற்றப் பட்டது.
08-Oct-2025