தமிழகத்தில் 17 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது
அமைச்சர் சக்கரபாணி தகவல்ஒட்டன்சத்திரம்: ''தமிழகத்தில் இதுவரை 17 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது''என,அமைச்சர் சக்கரபாணி பேசினார். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சியில் ரூ.27.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து,கோட்டை வழியில் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 27 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு நடந்த பூமி பூஜையில் பங்கேற்று அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் வழங்க கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 28,000 ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு பொருத்தப்பட்டது. திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தாசில்தார் பழனிசாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரி தேவி, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் ராமராஜ், தாட்கோ மதுரை கோட்ட செயற்பொறியாளர் பச்சைவடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல் முருகன், காமராஜ், பிரபு பாண்டியன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், துணை செயலாளர்கள் சிவக்குமார், முருகானந்தம் பங்கேற்றனர்.