உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 17ம் நூற்றாண்டு சந்திர கிரகண கல்வெட்டு கண்டெடுப்பு

17ம் நூற்றாண்டு சந்திர கிரகண கல்வெட்டு கண்டெடுப்பு

பழநி: ''பழநியில் பெரியநாயகி அம்மன் கோயில் பகுதியில் 17 ஆம் நுாற்றாண்டு சந்திர கிரகணத்தை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக ''தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் யாகசாலை கட்டடம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டில் நான்கு வரிகள் மட்டுமே உள்ளது. சந்திர கிரகணத்தன்று கோயிலுக்கு கொடை அளிக்கப்பட்டது குறித்து இக்கல்வெட்டு கூறுகிறது. தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சி உள்ள நிலையில் கிரகணங்களை கண்டறிவது எளிது. அக்காலத்தில் கிரகணங்களை முன்கூட்டியே கணிக்கும் வானியல் அறிவு தமிழ் அறிஞர்களுக்கு இருந்துள்ளது என்பது கல்வெட்டில் நிரூபணம் ஆகிறது. கிரகண காலங்களில் கோயில்களுக்கு கொடை வழங்குவது பன்மடங்கு பலன் அளிக்கும் என நம்பிக்கை அக்காலத்தில் இருந்து உள்ளது. கொடுத்தவர் யார், எந்த கொடை அளிக்கப்பட்டது, யாருடைய ஆட்சி என்பது குறித்த தெளிவான விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. கல்வெட்டு ஏதோ ஒரு காரணத்தால் உடைந்து 19ம் நுாற்றாண்டில் கோயில் புதுப்பிக்கப்பட்டபோது யாகசாலை கட்டப்பட்ட இடத்தில் கல்வெட்டு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி