உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெள்ளத்தில் அடித்துச்சென்ற 20 ஆயிரம் தேங்காய்கள்

வெள்ளத்தில் அடித்துச்சென்ற 20 ஆயிரம் தேங்காய்கள்

நத்தம்: நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக்.,22) இரவு கனமழை பெய்தது. அப்போது சமுத்திராப்பட்டியில் ரோட்டோர கழிவுநீர் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதில் சமுத்திராப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் 50, கோடவுனில் வைத்திருந்த 50 ஆயிரம் தேங்காய்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள குமரேசன் அதிகாரிகள் பார்வையிட்டு அரசின் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ