மேலும் செய்திகள்
பா.ஜ.,வினர் ஆலோசனை
12-Sep-2025
திண்டுக்கல்,: ''2026 நமக்கு அரை இறுதி ஆட்டம். 2029 இறுதி ஆட்டம். அதில் 40க்கு 40 தொகுதி வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் கூறினார். திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., பெரிய கட்சியாக ஆணிவேராக மாறுவதற்கு திண்டுக்கல்லில் கிடைத்த முதல் வெற்றிதான் காரணம். தி.மு.க., அ.தி.மு.க., இருகட்சிகளும் பூத்களுக்கு நேரடியாக சென்று எல்லா பணிகளையும் செய்கின்றன . நாமும் அவர்களை போல் வேலை செய்ய வேண்டும். பா.ஜ.,வினர் மட்டும்தான் கொள்கைக்காக இருப்பவர்கள். இதுவரை பூத் கமிட்டியில் உள்ளவர்கள் தலைமை சொல்லி வேலை செய்துவந்தனர். தற்போது தலைமையில் உள்ளவர்களும் சேர்ந்து வேலை செய்வார்கள். 234 தொகுதிகளில் 300 பூத் அமைக்கப்பட்டாலும் ஒவ்வொரு பூத்திலும் 50 பேர் இருக்க வேண்டும் என்பதே இலக்கு. மக்களுக்காக வேலை செய்தால் பா.ஜ., தானாக வளரும். 2026 நமக்கு அரை இறுதி ஆட்டம். 2029 இறுதி ஆட்டம். அதில் 40க்கு 40 தொகுதி வெற்றி பெற வேண்டும் என்றார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பேசுகையில், பா.ஜ., பூத் கமிட்டியை வலிமைப்படுத்த வேண்டும். திருநெல்வேலியில் பூத் கமிட்டி மீட்டிங் வெற்றிகரமாக நடைபெற்றது. அதேபோல் திண்டுக்கல் பூத் கமிட்டி மாநாடும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம் என்றார். மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
12-Sep-2025