உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் 24 ஆண்டு சிறை

போக்சோவில் 24 ஆண்டு சிறை

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே மிளகாய்பட்டியை சேர்ந்த 27 வயது கூலி தொழிலாளி மணி .17 வயது சிறுமியை காதலித்தார். 2024ல் சிறுமியை கடத்தி திருமணம் செய்து தனியே வாழ்ந்து வந்தார். சிறுமி கர்ப்பம் அடைந்ததையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு புகார்படி நிலக்கோட்டை மகளிர் போலீசார் இளைஞரை கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில் இளைஞர் ஆஜராகாமல் இருந்தார். இளைஞருக்கு 24 ஆண்டு சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சரண் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை