உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 345 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

345 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பழநி; பழநி பகுதிகளில் சப் கலெக்டர், நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 345 கிலோ தடை பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று சப் கலெக்டர் கிஷன் குமார் தலைமையில் புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, உழவர் சந்தை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு செய்தனர். 345 கிலோ தடை பிளாஸ்டிக் பொருட்கள் 3 கடைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து மூன்று கடைகளுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. தடை புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. 50 கிலோ தடை புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி