உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீடிப்பு பணி துவக்கம்

வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீடிப்பு பணி துவக்கம்

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதையை நீடிப்பு பணி துவங்கி உள்ளது. திண்டுக்கல் விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டம் 2012ல் துவங்கியபோது வடமதுரையை ஹால்ட் ஸ்டேஷனாக தரம் குறைத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. வடமதுரை மக்களின் விடாமுயற்சியால் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முழுமையான ஸ்டேஷனாக செயல்பட ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் தந்தது. ஏற்கனவே தாமதமாக நடந்த இருவழி பாதை திட்டத்தில் இறுதியாக சேர்க்கப்பட்டதால் குறைந்த துார துணை பாதை, ஜல்லி டெப்போவுக்கு ஒரு பிட் லைன் மட்டும் கூடுதலாக அமைந்தது. இங்கு வேகமான செல்லும் ரயிலுக்கு வழிவிடும் வகையில் குறைந்த வேகத்தில் செல்லும் சரக்கு, பாசஞ்சர் ரயில்களை துணை பாதையில் நிறுத்தி வைக்கும் அளவிற்கு நீளம் கிடையாது. இந்நிலையில் வடமதுரையில் இருக்கும் 3வது பாதையை மின்மயமாக்கலுடன் நீடிப்பு செய்ய ரூ.10.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ