நாகர்கோவில் ரயிலில் 5 கி., கஞ்சா கடத்தல்
திண்டுக்கல்: கோவை நாகர்கோவில் ரயிலில் கடத்தப்பட்ட 5.700 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை 8:00 மணிக்கு கோவையில் புறப்பட்டது. மதியம் 1:35 மணிக்கு திண்டுக்கல் வந்த இந்த ரயிலில் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 5.700 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் சி.சி.டிவி.,கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடத்தியவர்களை தேடி வருகின்றனர். பறிமுதல் கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது.