உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 86 புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர்

86 புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர்

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 86 புதிய ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ரெட்டியபட்டி ஊராட்சியில் மூன்று ரேஷன் கடை கட்டடங்கள், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையக் கட்டடம், இரண்டு சமுதாயக்கூடங்கள், 30 ஆயிரம், 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கிராம சாவடி என ரூ.2.34 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டில் திறந்து வைத்த அவர் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cwuiqwd1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதுவரை 18 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 44 மாதங்களில் 2600 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு முழு நேரம்,பகுதிநேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஒன்றிய செயலாளர் தர்மராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரத்தினம், மலர்விழிச்செல்வி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ