உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பெண்மையை போற்றும் சாதனை நிகழ்ச்சி

 பெண்மையை போற்றும் சாதனை நிகழ்ச்சி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் பெண்மையை போற்றும் சாதனை நிகழ்ச்சி நடந்தது. சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ,அக்னி சிறகுகள் அமைப்பு இணைந்து, மாதவிடாய் காலத்தில் பெண்மையை போற்றும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வலியுறுத்தி மாணவர்களின் உலக சாதனைக்கான நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் திலகம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பெண்மையை போற்றும் வகையில் மாதந்தோறும் மாதவிடாய் காலத்திற்கான சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வலியுறுத்தி உலக சாதனைக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது''என்றார். நீதிபதி திரிவேணி, மாதவிடாய் ஒரு உயிர் சக்தி. ஓய்வுக்காக ஒதுக்கிய காலத்தை தீட்டு என தவறாக கருதப்படுகிறது. மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக அரசு அதிகரித்ததை போன்று மாதவிடாய் காலத்திலும் சலுகை அளிக்க வேண்டும் என்றார். தொண்டு அமைப்பின் தலைவர் மெர்சி, பேரூராட்சி தலைவர் பிரதீபா, மாநில ஹேண்ட்பால் கழக செயலாளர் சிவக்குமார், அக்னி சிறகுகள் நிறுவனர் பிரபு, தலைவர் பிரியங்கா முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். 1 முதல் பிளஸ் டூ படிக்கும் 2000 மாணவர்கள் உலக சாதனைக்காக ரத்த துளியில் பெண் இருப்பது போன்று வரிசையில் நின்று கோஷங்கள் எழுப்பினர். சாதனைக்கான சான்றினை பள்ளி முதல்வரிடம் இன்ஜீனியஸ்ஷாம் சாதனை ஆவண நிறுவன நிர்வாகி ஏஞ்சலின் வழங்கினார். ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், அபிஷேக் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ