உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டேங்கர் லாரியில் ஓட்டை சாலையில் கசிந்த ஆசிட்

டேங்கர் லாரியில் ஓட்டை சாலையில் கசிந்த ஆசிட்

திண்டுக்கல்: திண்டுக்கல் வழியாக கரூர் சென்ற டேங்கர் லாரியில் ஓட்டை விழுந்ததால் சாலையில் ஆசிட் கொட்டியது.துாத்துக்குடியில், ைஹட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி திண்டுக்கல் வழியாக கரூர் நோக்கிசென்றது.திண்டுக்கல் பார்வதி கல்லுாரி அருகே லாரி வந்தபோது டேங்கர் பகுதியிலிருந்து விழுந்த ஓட்டை வழியாக 'ஆசிட்' வெளியேறி சாலையில் கொட்டியது. இதை அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் லாரி டிரைவரிடம் கூறினார். சாலையின் ஓரமாக லாரியை நிறுத்தய டிரைவர் டேங்கரில் விழுந்த ஓட்டையை அடைக்கும் முயற்சி ஈடுபட்டார். முடியாததால் திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் 'ஆசிட்'ஆல் பாதிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் பீய்ச்சி மீட்பு பணியில்ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை