அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.., சார்பில் திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் யாதவ மேட்டு ராஜா பட்டி மீனாட்சி மஹாலில் நடந்தது.முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். கிழக்குப் பகுதி செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,பகுதி செயலாளர்கள் சுப்ரமணி, சேசு, மாவட்ட அம்மா பேரவை செயலர் பாரதி முருகன்,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன்,துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஜெயபாலன், பழனிச்சாமி,தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், கவுன்சிலர்கள் சத்தியவாணி, உமாதேவி,கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார், அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் சின்னு, பிரபு, கிழக்குப் பகுதி நிர்வாகிகள் யூஜின், சுரேஷ், காமராஜ், அருண், குமார் மற்றும் கலந்து கொண்டனர்.