மனநல நிறுவனங்கள் பதிவுக்கு அறிவுரை
திண்டுக்கல்; மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கலெக்டர் சரவணன் கூறியதாவது : மாவட்டம் முழுவதும் 20 மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களை 5 குழுக்கள் மூலம் ஆய்வு செய்ய இருப்பதால் இதுவரை பதிவு செய்யப்படாத மனநல நிறுவனங்கள் மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010, Email-gmail.comஎன்ற முகவரியில் பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பங்களை https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme. php பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு 044- 2642- 0965 என்ற எண்ணில் அணுகலாம். உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.