உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., நிர்வாகி மீது ரூ.19 லட்சம் மோசடி வழக்கு

அ.தி.மு.க., நிர்வாகி மீது ரூ.19 லட்சம் மோசடி வழக்கு

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டியில் ரூ.19 லட்சம் பெற்று விட்டு திருப்பி தராத அ.தி.மு.க., நிர்வாகி மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர்.பழநி நெய்க்காரப்பட்டி அருகே எல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த அயுப்கான் 49. அ.தி.மு.க.,மேற்கு ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரிடம் ரூ.19 லட்சம் வங்கி கணக்கில் இருந்து பெற்றுள்ளார். திருப்பி தராத நிலையில் பணத்தை ஜாகிர் உசேன் கேட்டுள்ளார். தர முடியாது எனக்கூறி மிரட்டி உள்ளார். தாலுகா போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து அயூப்கானை விசாரித்தனர். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ